Friday 10 July 2020


சிவ நேயப் பேரவை.
5/146  B., காமராஜர் தெரு,
குரு அடுக்ககம். மடிப்பாக்கம்.,
சென்னை 600 091
மாணவர்களுக்கான போட்டிகள். கட்டணம் ஏதுமில்லை. மின் அஞ்சல் வழியாக கலந்துக் கொள்ளவும்.
இறுதி நாள் 31.07.2020.  போட்டிமுடிவுகள் 31.8.2020. அறிவிக்கப்படும்


6,7,8 வகுப்புகள்
9-10 வகுப்புகள்
+1,+2
வகுப்புகள்
கல்லூரி மாணவர்கள்







கட்டுரை
பக்திமார்க்கம்
இலக்கணமும் இந்தமிழும்
பெரியபுராண
நெறிகள்
ஆன்மிகம் கல்வியில் ஓர் அங்கம்

பேச்சுப்
போட்டி
கந்தனும் போர்த்திறனும்
திருமூலர் வாழ்க்கை நேறி
சமய அடியார்கள்
கபிலரும் பரணரும்

கவிதை

காண்பதெல்லாம் வெற்றிமுகம்
காண்பதெல்லாம் வெற்றிமுகம்
கொஞ்சம் அருள்கொடு

ஓவியம்
உழைப்பு
வியாபாரம்
என் இறைவன்
சிலை வடிவம்


நடனம்
5ம்வகுப்புவரை
புஷ்பாஞ்சலி
6-7-8
தில்லானா
காவடிச்சிந்து
தாண்டவம்[அ] சிவன்பாடல்
கரகாட்டம் [அ] மோகினியாட்டம் [அ] ஒடிசி


1. A4தாளில் இரண்டு பக்கங் களுக்கு மிகாமல்  அல்லது 350 வார்த்தைகள் கொண்டதாக கட்டுரை அமைதல் வேண்டும்.

2. தாளின் முதற் பக்கத்தில் பெயர் வகுப்பு தொலைபேசி எண்கள்
குறிப்பிடல் வேண்டும். கட்டுரை முடிவில் மாணவர் கண்டிப்பாக கையொப்பம் இடுதல் அவசியம்.

பேச்சுப் போட்ட்டி கால அளவு
 6 முதல் 12 வகுப்புகள் ஐந்து நிமிடங்கள்
கல்லூரி மாணவர்கள் 10 நிமிடங்கள்.

பேச்சுகள் பதிவு செய்து வாட்சாப்பில் அல்லது மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

கவிதைகள் 16 வரிகளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்

ஓவியம் பிறர் உதவியின்றி சார்ட் பேப்பரில் அவர்களாகவே வரைந்திருத்தல் அவசியம்

நடனம் பெண்டிரைவில் பதிவு செய்துக்கொண்டு இ மெயிலில் அனுப்பவும்

இமெயில் 158mgs@gmail.com
வாட்சாப்  8438437000


 10. குமரகிரி

கண்ணிலே உதித்தவன் கருவின்றி பிறந்தவன்
    கார்த்திகை பாலன் வடிவே
விண்ணிலும் மண்ணிலும் வேலவன் ஆளுமை
    விரும்பியே வணங்கும் தருவே
அண்டமும்  அகிலமும்  அருளினால்  சீவனும்
    அடிபணியும் ஞான குருவே
விண்ணதிர் குமரகிரி குமரனே  நீயருள்
    வள்ளி  தேவானை யுடனே.

சூரனைப் பிளந்து சேவலாய் மயிலாய்
    சுகமாக கொண்ட குமரா
தீரனும் உன்னெதிர் தீய்ந்து மாள்வரே
    திடமான தணிகை வடிவே
பரங்குன்ற நாதநின் பாதமே பற்றிட
    பாக்கியம் காண்பர் திடமே
வரமருள் குமரகிரிக் குமரனே  நீயருள்
    வள்ளி  தேவானை யுடனே.

தென்னவர் இதயம்  தங்கிய  தலைவன்
    தேவாதி தேவர் மகிழ்வே
மன்னனே செந்தூர் மண்ணுறை நாயகா
    மனைகாக்கும் முருக திருவே
பன்னிரு தோளனே பார்புகழ் வேலனே
    பகைபோக்கும் பரமன் மகவே
பொன்மலை குமரகிரிக் குமரனே  நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.

புண்ணியம் தேடுவார் போற்றுவார் உம்மையே
    பரமனின் செம்மை கனியே
நண்ணியே பாடுவார் நாடியே ஆடுவார்
    நாதனே பழநி வேலா
எண்ணற்ற பேர்கள் ஏந்துவார் காவடி
    ஏற்குமெம் காந்த வடிவே
தண்மலை குமரகிரிக்  குமரனே  நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.






அஞ்சுவார் உன்னெதிர் வந்திடும் அசுரரும்
    ஆணவம் அழிந்து போவார்
தஞ்சைவளர் சுவாமிமலை குன்றுடை வேலனே
    தாள்கண்டேன் தரும குருவே
மிஞ்சிடும் அமுதமே மோகன வடிவமே
    முருகனே எழில் நாதனே
விஞ்சிடும் குமரகிரிக்  குமரனே  நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.

விண்ணுகர் தேவரும்  அயனும் மாலும்
    விரும்பிடும் குருபரத் திருவே
அண்ணாமலை நிகர் அருமைப் புதல்வனே
    அகிலம் தொழும் தேவனே
தண்மதி நங்கை தேவானை வள்ளி
    தழுவும் தணிகைத்திரு வேலனே
விண்விட்ட குமரகிரிக்  குமரனே  நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.

அழகரும் சொக்கரும் அணிசெய் மதுர
    ஆலவாய்த் திரு நகரிலே
அழியாத பழமுதிர் சோலையில் அமர்ந்த
    செழுமிகு திருக் குமரனே
வழியேதும் காணாத வழியேகும் அடியார்கள்
    வளம்காண வைக்கும் பரனே
விழுமைமிகு குமரகிரிக் குமரனே நீயருள்
    வள்ளிதே வானை யுடனே

காமனை யெரித்தபின் கனலென உதித்து
    கொடுசூரன் அழித்த குமரா
யாமகோ டக்கொடி கொண்ட முருகனே
    அமரர்கள் போற்றும் தலைவா
நாமகள் பூமகள் தாயெனும் உமையவள்
     நல்லாசி கொண்ட முருகா
சீமுகக் குமரகிரிக் குமரனே நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.










முக்கண்ணர் பாலனே முத்தமிழ் இறைவனே
    எக்கணமும் மனதி லுறைவான்
சிக்கெனப் பிடித்திட அக்கண மருளுவான்
    தக்கனை முடித்த தலைவன்
முக்குணம் நீக்குவான் முழுதென ஆக்குவான்
    முதல்வனாம் முருக செவ்வேள்
தக்கதோர் குமரகிரிக் குமரனே நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.


வேற்றுமை யில்லா ஆற்காட்டுத் திமிரியில்
    வேலுடன் அமர்ந்த தமிழே
ஊற்றென அருள்வதும் உறவெனக் கொள்வதும்
    உன்நிலை ஆதல் கண்டேன்
போற்றுவார் ஆடுவார் பாடுவார் உன்முன்னே
    பக்தியாய் வருவோர் யாரும்
நாற்கர குமரகிரிக் குமரனே நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.

பொன்மலை சிகரம் புகுந்தநற் சித்தர்
    பொழுதெலாம் பிரணவம் சொன்னார்
முன்னூற்று முப்பது படிகளும் ஏறினேன்
    முன்வந்து போற்றி சொன்னேன்
சொன்னேன் மகஸ்ரீயின் சுகமான போற்றிகள்
    என்குலம் வாழ்த் தினானே
மன்னனே குமரகிரிக் குமரனே நீயருள்
    வள்ளிதே வானை யுடனே.