Sunday 28 December 2014



காலை 9.30
இறைவணக்கம்:

10.00 மணி  கவியரங்கம்
கவியரங்கத் தலைமை : திருமதி சுபா ரவிச்சந்திரன்
எனக்கென உதித்த மாது.
11.00
திருமுறைகளில் உணரப்படுவது
பக்தியா ?     தமிழ்மணமா ?
                              
நடுவர்
“குறள் வழி நல்லார்”
புலவர் கோ.பார்த்தசாரதி
பக்தி
அணித்தலைவர்  
புலவர் திரு தட்சிணாமூர்த்தி
உறுதுணை       கவிஞர் பொள்ளாச்சி சண்முக நாதன்
கவிஞர் தாம்பரம் சுவாமி நாதன்
கவிஞர்    மு.ஜெயலக்ஷ்மி

தமிழ்மணம்
அணித்தலைவர்  
சிவத்திரு    கோவிந்தராஜன்  
உறுதுணை       திருமதி  கற்பக லட்சுமி சுரேஷ்
கவிஞர்  என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
சுடர் ஒளி    உமையவன்

புரவலர் கட்டணம் ரு.1000/- மட்டுமே.

பேரவையின் பெருமைமிகு புரவலர்கள்
2015க்கான புதுப்பித்தலை செய்து
அவையின் செயல்பாட்டுக்குஉதவுங்கள்
அன்பர்களே! அமைப்புக்கு உதவ
புதிதாக புரவலராக  இணையுங்கள்.


பேரவையின் உறுதுணையாளர்கள்
திருமதி சியாமளா ஸ்ரீனிவாசன்;
குழந்தை பணிச்செல்வர்
திரு. பி. வெங்கட்ராமன்;
கவிமாமணி பாரதிமணியன்;
திரு இளசை கிருஷ்ணமூர்த்தி மற்றும்
 திரு எஸ். கோவிந்தராஜன்.

சிவ நேயப் பேரவையில் பங்கு கொள்வோரில்
ஒருவருக்கு அதிர்ஷ்டப் பரிசு
கவிதை படிப்போருக்கு பரிசு.-
அரங்கம் வருவோருக்கு நூல்கள் அன்புப்பரிசு




மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகுஎல்லாம்
சிவ நேயப் பேரவை
5/146 காமராஜர் தெரு மடிப்பாக்கம்
சென்னை 600091
கைபேசி 8438437000

சொற்பொழிவு,  கவியரங்கம்,  நூல்நயம்,  கலை,  இலக்கியம், தொண்டு
           

10.01.2015 சனிக்கிழமை
காலை 9.30 மணி
இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம்  28/11, 27வது தெரு, நங்க நல்லூர் சென்னை 600061

ஈச நேசன் மகஸ்ரீ – நிறுவனத் தலைவர்
திருச்சி கெளதமன் – செயலாளர்
                                                             திரு ஸ்ரீ.புத்திரன்  - பொருலாளர்.



























































Tuesday 9 December 2014



அன்னை
அம்புலியைக் காட்டி பறவைகளை ஓட்டி
ஆடையணி காட்டி             புகழ்பேசி

கோலவிழி காட்டி ஓசை இசை கூட்டி
புன்னகையைக் காட்டி                 உறவாடி

வெனக் காட்டி வாய் அமுதூட்டி
ஆனந்த மூட்டி அரும்        பசிபோக்கி

கருத்தான பாட்டால் தாலேலோ பாடி
தூங்கவிட்டு மகவை                   மகிழ்வோட

கண்ணேறு    பட்டதோ   எனஎண்ணி
கடுகளவே உடல்சோர                வருத்தமுற்று

சாலை மூன்று சந்திக்கும் இடம் நாடி
காரமுப்பு தணலிலிட்டுக்          கையால்சுற்றி

மாதம்பத்து  வலிசுமந்து பெற்றமாது
மகிழ்வுடன்  தன்மகவை        போற்றுவாளே.





ஆ அம்.

மேலே பாரு மேலே பாரு
                 வெள்ளி நிலா தெரியுது
மேலே பார்த்து கீழே பார்த்தா
                 நம்மவீடு இருக்குது
வாயத்திற வாயத்திற        
       அம் சாப்பிடு
வயத்த பாத்தா இன்னும் கொஞ்சம்
               வேணும்னு தோணுது

சொன்னத கேட்டயானா புது
               சொக்கா போட்டுக்கலாம்
இன்னும் ஒரு வாய் மட்டும்
               மென்று தின்று முழுங்கிடு 
 மீந்த சாதம் சாப்பிட
                நம்ம ஜூ ஜூ நிக்குது
 அந்த காக்கா சோறு கேட்டு
                காகான்னு கத்துது.

தந்தை
                                                     அப்ப அப்ப கிட்ட வந்து கொஞ்சிடுவாரு
                      அப்பான்னு கூப்பிட்டா அவர் சிரிப்பாரு
தொட்டுதூக்கி தோளின்மீது அணைச்சிக் கொள்வாரு
« ««««««««
««««««««««
தூரப்போயி டாட்டா சொல்லி கையசைப்பாரு

மோட்டார் வண்டிமேலே நானும்  ஏறிவிட்டாலே
முழுசா என்னை அணைச்சிக்கிட்டு ஓட்டிடுவாரு       
கேட்டா ஒரு சாக்கிலேட்டு கொடுத்திடுவாரு
கன்னம் கிள்ளி சிரிச்சி ரசிச்சிடுவாரு

உள்ளே வந்தா உப்புமூட்டை தூக்கிடுவாரு
மெள்ள மார்பில் அணைச்சிக்கிட்டு தூங்கிடுவாரு
முழிச்சிகிட்டா முத்தம்கூட தந்திடுவாரு
கொள்ளை இன்பம் உன்னால்தான் என்றிடுவாரு








உறவு
அப்பாவுக்கு அண்ணாதான்  பெரியப்பா
அப்பாவின் தம்பிதான்  சித்தப்பா
அம்மாவின் சகோதரர்  மாமா
அம்மாவின் சகோதரி அத்தை
]
எனக்கு பெரியவதான் அக்கா
எனக்கு சிறியவதான் தங்கை
முன்னாலே பிறந்ததாலே அண்ணா
அடுத்து   பிறந்தவந்தான் தம்பி

ஆசையோடு வளர்க்கிறாங்க அம்மா
பாசத்தோடு அணைக்கிறாங்க அப்பா
உறவுபற்றி தெரிஞ்சிக்கிட்டோம்
உள்ளத்தில் பாசத்தை வளத்துக்கிட்டோம்









ஐஸ் வாங்கித்தா

அம்மா மேலே கோவம் ஆனா நான் சமத்து
அப்பாகிட்டே சொன்னேன் கண்டுக்கவே யில்லை
சும்மாயிருக்கச் சொன்னா சுகம் வருமா சொல்லு
சுவையான ஐஸ் வாங்கித்தந்தா நில்லு.

பையில் பர்சை எடுத்து நைசா வாங்கி கொடுத்தா
படக்குன்னு எழுந்து பல்லைகாட்டி சிரிப்பேன்
கையில் ஒரு ஐஸு  வாங்கி கொடுத்து பாரு
கன்னத்திலே கிஸ்ஸு கொடுத்திடுவேன் நூறு





காது குத்தல்

டும் டும் தக்கா  டும் டும் தக்கா
பீ பீ எல்லாம் வச்சாக
கம கமக்கிற சந்தனம் பன்னீர்
கல்கண்டுகூட வச்சாக

வாமா இங்கே என்றேசொல்லி
பட்டுசட்டை போட்டாக
மாமா மடியிலே உட்கார வச்சி
உச்சிமோந்து ரசிச்சாக

அப்பா பாட்டி தாத்தா அத்தை
அங்கும் இங்கும் நடந்தாங்க
அப்ப அப்ப அம்மா மட்டும்
முகத்தைப் பார்த்து சிரிச்சாக

காதுல குங்கும பொட்டுவச்சி
கம்பி கடுக்கன் குத்தினாக
!!ன்னு அழுத என்னைப் பார்த்து
அழகாயிருக்குன்னு சிரிச்சாக








சேமிப்பு
உறவுகள் நமக்களிக்கும்
சில்லறை காசு யாவும்
வங்கியில்  போட்டு வைச்சா
வட்டியும் தானே சேர்க்கும் !



 

                           மறக்காமல் சேர்த்துவைத்தால்  
                           மகிழ்வுகள் தொடரும் பாரீர்
                           வங்கியில் போடப் போட
                           வசதிவரும் வருங்காலத்தில்

                          

சேமிப்பு இல்லையானால்
சேர்ந்திடும் கவலைஉண்மை
நாமிப்போ சேமித்தாலே
நன்மைகள் சேருமன்றோ. !




தேனீ

பூக்கள் தேடி தேனீக்கூட்டம் நந்தவனம் சுற்றுது
பூவுக்குள்ளே உள்ள தேனை கூட்டுக்குள் சேர்க்குது

ஈக்கள்தேனைசேர்ப்பதாலேதேனீஎன்று சொல்கிறோம்
ஈடில்லாத இயற்கை மருந்து இதுதானென்று வியக்கிறோம்

ராணித்தேனீ ஆட்சி செய்யும் ராஜ்ஜியத்தை பார்க்கிறோம்
மகளிர் ஆட்சி சிறந்ததென்று மனதினிலே உணர்கிறோம்

மேனியெங்கும் கொட்டுமென்று ஓடி ஓடி ஒளிகிறோம்
மேன்மையான பொருள் இதென்று வாங்கியே களிக்கிறோம்


 

ஜோ மழை
வேத்து கொட்டி முடிஞ்சி போச்சி இப்பகாத்து அடிக்குது
பாத்துக்கிட்டே இருக்கும் போது தூரல் கூட போடுது
காத்து வேகமாச்சுது கண்ணில் மின்னல் தெரியுது
சேத்து வச்ச மேகத் தண்ணி ஜோன்னு கொட்டுது

வெடி வெடிக்கும் சப்தம்போல வெடவெடக்க வைக்குது
இடிஇடிச்சா  நெஞ்சுக்குள்ளே படபடப்பு ஆகுது
ஓடிஓடி மழையிலே நனையனும்னு தோணுது
ஆடி ஆடி மரக்கிளைகள் அசைந்து பயம் காட்டுது


சைக்கில் வண்டி

படிக்க
வேண்டிய பாடசாலை
பக்கத்தூரில் இருக்குது
படிப்புக்கேற்ற சாதனங்கள்
பார்க்க பார்க்க மலைக்குது

சாலை வழி    நடக்க  நடக்க
சலிப்பாக இருக்குது
காலை மாலை நடந்து போனால்
காலெல்லாம் வலிக்குது

சைக்கில் வண்டி ஒண்ணு இருந்தா
ஜாலியாக போகலாம்
கைப்பிடியில் பையைமாட்டி
காலால் பெடல் மிதிக்கலாம்

கையால் மணி அடிச்சி அடிச்சி
ஓரம் போகச் செய்யலாம்
தையா தக்கா ஆட்டம் போட்டு
சந்தோஷமா இருக்கலாம்








பாப்பா பாட்டு பாடுது

வாலை வாலை ஆட்டிகிட்டு
நாய்க்குட்டி  நக்குது
காலை காலை சுத்தி வந்து
பூனைக்குட்டி  நிக்குது

                              வேலை செய்யப் போகும் எருது
                              தொட்டி தண்ணி குடிக்குது
                              பாலைத் தரும் வெள்ளைப்பசு
                              புல்லுகேட்டு கத்துது




வேலை  இல்லா  சின்ன ஆடு
!மே! ன்னு கத்துது
காலை வேளை மரத்தின்மேலே
பச்சைக்கிளி பாக்குது



 
                                  சோலை யிலே குக்கூவென
                                  கருப்பு குயில் கூவுது
                                  காலை ,மாலை வானத்திலே
                                  பறவை ஜோரா பறக்குது



மெட்ரோ  இரயில்

மெட்ரோ ரயிலு மெட்ரோ ரயிலு
ஸ்டேஷன் வந்தது
கிட்டே வந்து நிந்ததும்தான்
ரயில்கதவு திறக்குது
திரள் திரளாய் திபு திபுன்னு
எவ்வளோபேரு
கலர் கலராய் அவர்கள் டிரஸ்ஸு
மயக்குதுபாரு
நீலகோட்டு சாரு கிட்டே
டிக்கட்டு காட்டியே
நிம்மதியா ஸ்டேஷன் விட்டு
செல்வதைப்பாரு.

        






                  வாத்து


குவாக் குவாக் குவாக்
குள்ள வாத்து நாந்தான்
நல்ல உள்ளம் போல
வெள்ளையாக இருப்பேன்
நீச்சல் நல்லா அடிப்பேன்
நிலத்தில் மெல்ல நடப்பேன்






   சேவல்


அதிகாலை  முதல்முதலாய் நான் விழிப்பேன்
அப்புறம்தான் சூரியனை வரவழைப்பேன்

கொண்டைவெச்சி மிகஅழகா நான்இருப்பேன்
கொக்கொரக்கோ கொக்கரக்கோ என்றுகத்துவேன்

சினிமாவில் என்பாட்டு பாடுறாங்களே
இனிமையா என்குரலை கேட்கிறாங்களே. !                



 கோழி


கொக் கொக் கொக் என்று
நான் கத்துவேன்
குப்பையெல்லம் கிளறி கிளறி
புழுவைத் தின்னுவேன்.
முட்டையெல்லாம் அடைகாத்து
முடிஞ்ச பின்னாலே
குட்டி குஞ்சு கூடவர
வீட்டை சுத்துவேன்
   
எறும்பு

எங்களைப்போல் சுறுசுறுப்பு
வேறு யாருங்க
எங்கள்பின்னால் எத்தனைபேர்
எண்ணிப்பாருங்க
பட்டாளத்து சிப்பாய்போல
பயணம் செய்யறோம்
பார்த்து பார்த்து தானியத்தை
சேர்த்து வைக்கிறோம்
சேமிப்பு பழக்கத்தை
கற்றுக் கொள்ளுங்கள்
சாலைவிதி எம்மைப்போல
தெரிந்து கொள்ளுங்கள்

கரப்பான் பூச்சி


என்னை பாத்தா எத்தனைபேர்
பயப்படுறாங்க
என்னை கொல்ல ஏன் இப்படி
முற்படுறாங்க
எல்லா இடமும் என் இடந்தான்
எங்கும் பறக்கிறேன்
மல்லாந்து நான் விழுந்தால்
மடிந்து போகிறேன்

             
                


கடலே கடலே என்ன பண்ணுவே?
கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
எனக்குள்ளே  உயிர்கள் பல வாழ வைக்கிறேன்.

கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
எங்கு மண்ணை தோண்டினாலும் தண்ணி தருகிறேன்

கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
உங்களுக்கு வேண்டிய உப்பு தருகிறேன்

கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
காற்றில் சென்று மேகமாகி மழையைத் தருகிறேன்

கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
பவழம் முத்து போன்ற சொத்து நான் அளிக்கிறேன்

கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
மக்களுக்கு உணவுவகை நிறையத்தருகிறேன்

கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
கண்டம்விட்டு கண்டம்செல்ல வழியும்  ஆகிறேன்

கடலே கடலே இவ்வளோ தண்ணி என்ன பண்ணுவே ?
உன்கால்  நனைத்து இப்போ  மகிழ்வு காண்கிறேன்