Thursday 22 January 2015

கடந்த 21.12.2014 அன்று புதுக்கோட்டையில் ! புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின்  ஐம்பெரும் விழா நடைபெற்றது. பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார், பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி, சொல்லருவி மு. முத்துஸ்ரீனிவாசன்புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்திரு எஸ். கிருத்திவாசன்  குழந்தை இலக்கியப் பேரவைத் தலைவர் திரு பி வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். இவ்விழாவில் சென்னை சிவ நேயப் பேரவைத் தலைவர்  ஈச நேசன்  மகஸ்ரீ  எம்.ஜி ஸ்ரீனிவாசன்  அவர்களுக்கு சிவ நேயப் பாவலர் என்னும் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டது.








 கட்டிக் கரும்பே  கை தட்டு


கைதட்டம்மா கைதட்டு
களிப்புடனே கை தட்டு

பாட்டுப் பாடி கைதட்டு
பரவசம் கூடும் கைதட்டு

அப்பா அம்மா என்றேசொல்லி
அழகாய் நீயும் கைதட்டு

நடைவண்டி தள்ளி  நடந்து
நல்லா சிரிச்சி கைதட்டு

காக்கா சொல்லி கையைவீசி
கண்ணடிச்சி கைதட்டு


கம்பளி பூச்சி

என் உடம்பு பூராவும்
எவ்வளோ கம்பளிமுடி பாருங்க
எனக்குக் கூட தெரியாம
எனக்குத் தந்தது யாருங்க
முருங்கை மரம் என் நண்பன்
அருவருக்க பார்க்கதே
அழித்துவிட நினைக்காதே


மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகுஎல்லாம்
சிவ நேயப் பேரவை
5/146 காமராஜர் தெரு மடிப்பாக்கம் சென்னை 600091
8438437000  E Mail 158mgs@gmail.com

சொற்பொழிவு,  கவியரங்கம்,  நூல்நயம்,  கலை,  இலக்கியம், தொண்டு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
14.02.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி
இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம்  28/11, 27வது தெரு, நங்க நல்லூர் சென்னை 600061


இறை வணக்கம்
கவியரங்கம்
சொன்னேன் இதுவே சுகம்

நூல் நயம் பாராட்டல்
முனைவர் கவிமாமணி குமரிச் செழியன்
[ தலைவர் பாரதி கலைக் கழகம் சென்னை 61]

கவிஞர் கெளதமனின்    “திசை எங்கும் சிறகுகள்

சிறப்பு சொற்பொழிவு
எட்டும் இரண்டும் தித்திக்கும்
அளிப்பவர்
திருவொற்றியூரான் அடிமை


அனைவரும் வாருங்கள்