Thursday 31 March 2016

சிவ நேயப் பேரவையின் மகளிர் விழா

      சென்னை 91 மடிப்பாக்கத்தில் இயங்கிவரும் சிவ நேயப் பேரவையின் மகளிர் விழா கடந்த 12.03.2016 அன்று வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபத்தில் நிகழ்ந்ததுகாலை பேரவையின் கெளரவ ஆலோசகர் திருமதி சியாமளா ஸ்ரீனிவாசன்,சாரதாம்பாள் ஸ்ரீனிவாசன், ஆனந்திஸ்ரீராமன், கீதப்பிரியா நிரஞ்சனன், ஹேமாராம்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து ரவிகோசலை மற்றும் பானுரேகா குழுவினரின் இன்னிசை நடைபெற்றது, அதன்பிறகு நடைபெற்ற நடன நிகழ்வு அனவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. குறிப்பாக செல்வி சஞ்சானாவின் பாம்புநடனம் அவையில் பலத்த கரகோஷத்தை உண்டாக்கியது.
        திரு ஈச நேசன் மகஸ்ரீ தனது வரவேற்பு உரையைக் கவிதை வடிவில் அளித்தார்.  பின்னர் நந்தலாலா மிஷின் டிரஸ்டிகளான திருமதி ராஜி ராமகிருஷ்ணன், லலிதா பாலசுப்ரமணியன் விருதுகளை வழங்கினர். 11 மங்கையர்களைப் பாராட்டி அளித்த மகளிர் தின விருதுகள் சிறப்பான நிகழ்வாகவே இருந்தது.  விழா அரங்கில் ஆத்திமாலை ஆசிரியர் கே.ஏ.ஜெயச்சந்திரன், பொதிகை விஜயகிருஷ்ணன், பாரதி கலைக்கழக தலைவர் பாரதி சுராஜ், திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர் கோ.பார்த்தசாரதி, புதுக்கோட்டை இலக்கிய மன்றத் தலைவர் சொல்லருவி முத்து ஸ்ரீனிவாசன், பாரதி பாரதிதாசன் மன்றத் தலைவர் திருவைபாபு, பாவையர் மலர் ஆசிரியை வான்மதி, புதுகைத் தென்றல் ஆசிரியர் திரு தருமராசன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். சிவ நேயப் பேரவைச் செயலாளர் சாமி கோவிந்தராசன் நன்றி கூறினார்.   கவிதை களாலும், சிறந்த மேற்கோள்களாலும்  நீரை அத்திப்பூ என்னும் திரு அப்துல் லத்தீப்  அவர்கள் விழா நிகழ்வைத் தொகுத்து அளித்தார் பொருளாளர் ஸ்ரீ புத்திரன் தேனீர், மதிய உணவு ஆகியவைகள் உட்பட விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டார்.  அரங்கத்தில் ஆத்திமாலை உட்பட வழங்கப் பட்ட பல நூல்கள் அனைவர் கைகளில் காணப்பட்டது.