Tuesday 26 May 2015

ஜோதிடம் கற்போம்[ 2 ]
ஞானகுரு.

 
கடந்த இதழில் ராசிகளும் அதில் பங்குபெறும் நட்சத்திரங்கள் பற்றியும் தெரிந்துக் கொண்டோம். இனி.........

12 ராசிகள் அதன் சலனத்தினைப் பொருத்து 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவை சரம், ஸ்திரம்., உபயம் என்பனவாம்

மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம்       சரவீடுகள் எனப்படும். இந்த ராசிகளில் பிறந்தவர்கள்  திடீர் முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள்.

ரிஷபம், கடகம், துலாம், கும்பம்           ஸ்திர வீடுகளான இந்த ராசியில் பிறந்தவர்கள்  தாமதித்த முடிவுகளையே எடுப்பார்கள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம்             உபய இராசிகளான இந்தராசி களில் பிறந்தோர்  நிதானமாக  யோசித்து முடிவு மேற்கொள்வர்.

இது தவிர பகல் ராசி, இரவு ராசி, பகலிரவு ராசி எனவும் உள்ளது. அது எது என்று பார்ப்போம். இவ்வகை ராசிகளில் பிறப்பு உதயம் எது என்பதும் குறித்துள்ளார்கள்.

இரவில் வலிமை பெற்றுத் திகழும் இராசிகள். மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம்
இந்த ராசிகளில் பிறப்பு கால்கள் உதிக்கும்

பகலில் வலிமை கொண்டு திகழும் ராசிகள்   மிதுனம், சிம்ம்ம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம்    இந்த ராசியில் பிறப்பு தலை உதயம் ஆகும்.

மீன ராசி பகல் மற்றும் இரவு காலங்கள் என நாள்முழுதும்  வலிமையுடன் இருக்கும்
உபயோதர ராசியாகும்.

தவிரவும் ராசிகளின் ஆதிபத்ய உச்ச நீச ராசிகள் எவை என்பதையும் கவனத்தில் கொள்ளுவது அவசியம். ஒவ்வொரு ராசிக்கும் ஆட்சிகிரகம் உண்டு. ஆனால் நான்கு   
இராசிகளுக்கு உச்ச நீச கிரக அமைப்பு இல்லை.










ராசிகள்         ஆட்சி       உச்சம்       நீசம்             நட்பு                                பகை
மேஷம்   செவ்வாய்   சூரியன்      சனி        புதன்,சுக்கிரன்                  சந்திரன்,குரு,ராகு கேது. 

ரிஷபம்    சுக்ரன்      சந்திரன்     ராகு-கேது   செவ்வாய் புதன்,குரு,சனி     ,  சூரியன்

மிதுனம்   புதன்        **            **          சந்திரன்,செவ்வாய் சுக்ரன்,      சூரியன்
                                                குரு, ராகு –கேது.
 
கடகம்     சந்திரன்      குரு       செவ்வாய்   புதன்                        சுக்ரன், சனி, ராகு-கேது.

சிம்மம்     சூரியன்    **           **            குரு                        சந்திரன், செவ்வாய் புதன்,
                                                                            ,சனி சுக்ரன்,ராகு- கேது   

கன்னி      புதன்       புதன்       சுக்ரன்     சந்திரன்,செவ்வாய் குரு          சூரியன்
                                              ,சுக்ரன்,சனி, ராகு,கேது
                                              

துலாம்     சுக்ரன்      சனி        சூரியன்     செவ்வாய், புதன்               சந்திரன்
                                               குரு,ராகு-கேது

விருச்சிகம்  செவ்வாய்  ராகு-கேது  சந்திரன்     புதன் சுக்கிரன்                 சூரியன், குரு, சனி

தனுசு       குரு        **          **          சூரியன்,சந்திரன்,புதன்           செவ்வாய்
                                               சுக்கிரன் சனி ராகு-கேது               
                                                         
மகரம்       சனி      செவ்வாய்    குரு       புதன் ,சுக்ரன்,ராகு-கேது          சூரியன் சந்திரன் 

கும்பம்      சனி       **            **          சூரியன்,புதன்,குரு,சுக்ரன்        சந்திரன் செவ்வாய்
                                                                               ராகு, கேது.

மீனம்       குரு       சுக்ரன்      புதன்        சூரியன், சந்திரன், சனி         செவ்வாய்
                                                ராகு-கேது

ஜாதகம் கணிப்பதை அறிந்துக்கொண்டு ஜாதகத்தின் கிரக நிலைத் தன்மையை ஒட்டி அந்த ஜாதகர் பெறும் பலன்களைக் காண ஆரம்பிப்போம்

     ஒரு நாளில் எப்போது குழந்தை பிறந்தது என்பதை துல்லியமாக குறித்துக் கொள்ளவேண்டும். சூரிய உதயத்தில் இருந்து மறுதினம் சூரிய உதயம் வரை ஒரு நாள் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதன்படி சூர்ய உதயத்திலிருந்து எத்தனையாவது நாழிகையில் குழந்தை பிறந்தது.  என்பதை சரியாக கணக்கிடப்  படாவிட்டால்   கண்டிப்பாக பலன்களில் மாறுதல்கள் உண்டாகி சரியான விவரத்தினை அறியாமல் போய்விடக்கூடும்.

முதலில் அன்றைய சூரிய உதயத்தினைக் கொண்டே நாழிகையைக் கணக்கிட வேண்டும். சூர்ய உதயம் என்பது பஞ்சாங்கங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும்,   இச்சூரிய உதயம் ஊருக்கு ஊர் மாறுபடும் எனவே
அவ்வூருக்கான அக்ஷாம்சம் என்ன என்று கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டும் இந்த விவரங்களும் பஞ்சாங்கங்களில் தெளிவாக கிடைக்கும்.   இனி குழந்தையின் இராசி, அதன் பாதநிலை  லக்கினம் என்பதை கணிக்கத் துவங்குவோமா?


No comments:

Post a Comment