Friday 22 May 2015

நெடில் இதில் இல்லை  நெஞ்சம் அவன் எல்லை.

வருகருனை தருநிலவு விழியருள தினமுருகி
தருபதி மலையிடை குருவென  மனமகிழ்
துரவற சிந்தை நினைவினில் இனைந்திட                            
அரகர சிவசிவ எனும்மன நினைவினில்                                  1

புத்தியினில் புகும்க ருணை அலைபுரள
நித்தியமும் நினைத்து நெஞ்சுமிக உருக
கண்குள  வடிவுகொள உன்னெதிரில் நின்று
எண்ணமழை இசையென தரும் சமயம்                                   2

திரிபுரனின் வடிவழகு மனதில் நினை
சொரியும்வழி கண்டுமிக சுவைக்கு  மந்த
கனித்த முப்பழமும் படைத்து தொழுதுஎழ
தனித்த வழியெனத் துதிக்கும் அடியவனின்                            3

கரம்குவித் திடும்பொழுது கண்மணி உட்புகுந்த
பரமசிவ திருஉருவ வடிவுக்குள் சக்தியுமை
இடதுபுரம் மருவி வரும் நிலை உணரஎன்
மட நெஞ்சு  கொண்ட சுகம்  எனக்கதிகம்.                              4

துளங்கொளி சிவனை உளங்கொளி உள்ளில்
வளங்கொளி கொண்டு உள்நுழைத் துஅவ்
அஞ்சும் கடந்த அற்புத  பொற்பதம்        
நஞ்சு புகுந்த இடம்புக  நினைக்கும்.                                       5
.
படைப்பதும் கொடுப்பதும் அழிப்பதும் அவனென
நடைபெறும் உலகியல்  நம்மனம் அறியும்
நடைபிணம்  எனும்படி  நம்வழி எதற்கு
கடைவழி தெளியநல் புகும்வழி புரியும்.                                 6

மட நினை வுகள் மறக்கும் குணவழி
திடமென  அவன்பதம்  பற்றித்  திரிந்திட
சுடலையில் நடமிடும் சுந்தரன் செய்கை
திடுமென நம்மிடம் நிமிடம் புகுந்திடும்                                   7

சிறுகதை   என்னும்  உலகத்து  நிலமை
மறுகதை   துவங்கிட  வழிகளும்  துளிர்க்கும்
புறவழி  எதுவும்   நல்லது    அல்லநல்
அறவழி  அமைய  நினைத்திடு இறைவனை                           8

அலைமகள்  கலைமகள்  அளிப்பது செல்வம்
மலைமகள்  சக்தியை அளித்திடும் வெற்றி
அனைவரும் அவரருள் பெற்றிட தடுக்கும்
வினையது அகல சிவன்பதம் கொடுக்கும்                               9

பத்துத் திசையும்  விரிந்த  பசுபதி
எத்தும் இருடிகள் தொழுதிடும் அருள்நிதி
நடமும் நளினமும் கொண்ட  பரமனை
திடமுடன் இதயம் இடம்பெற துடிக்குது                               10

துயரினி இல்லை  துவள்வதும் இல்லை
பயமெதும் இல்லை  பற்றுகள்   இல்லை
உயர்வெனும்  அரசன்  இருந்திடும் தில்லை
உயர்வுகள்    முழுவதும்   தருகின்ற எல்லை                          11


ஈச நேசன் மகஸ்ரீ.  8438437000

No comments:

Post a Comment